×

சாத்தன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை திருவிழா

நாகர்கோவில், ஏப். 25: சாத்தன்விளை ஊர் முத்தாரம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று (25ம் தேதி) தொடங்குகிறது.விழா நாட்களில் காலை 5 மணிக்கு சுப்ரபாதம், 6 மணிக்கு தீபாராதனை, 6.30 மணிக்கு பிரசாதம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.இன்று காலை 8 மணிக்கு விளையாட்டுபோட்டிகள், பகல் 2 மணிக்கு கோலப்போட்டி, 4 மணிக்கு அபிராமி அந்தாதி மூலமும் உரையும், 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கல், 8.15க்கு இந்துசமயம மாநாடு, 9க்கு பரிசு வழங்கல், இன்னிசை கச்சேரி ஆகியன நடக்கிறது.26ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு விளையாட்டு போட்டிகள், மாலை 5 மணிக்கு பக்திகானம், 6 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கல், 6.30க்கு இந்து சமயமாநாடு, 8க்கு சமயவகுப்பு மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், 27ம் தேதி காலை 9 மணிக்கு பண்பாட்டு போட்டிகள், மாலை 3.30 மணிக்கு விளையாட்டு போட்டிகள், 5 மணிக்கு பக்தி கானம், 6 மணிக்கு தீபாராதன, 7 மணிக்கு கபடி போட்டி ஆகியன நடக்கிறது.

28ம் தேதி காலை 7 மணிக்கு ஓட்டப்பந்தயம், 7.30க்கு கிரிக்கெட்போட்டி, 8க்கு பகவத்கீதா பாராயணம், பகல் 12க்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு கபடி இறுதி போட்டி, இரவு 8 மணிக்கு மாறுவேட போட்டி, 8.30க்கு பரிசு வழங்கல், 9.30க்கு சமூக நாடகம் ஆகிவை நடக்கிறது.29ம் தேதி காலை 5.30க்கு செண்டை மேளம், 7 மணிக்கு மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம், சந்தனகுடம் ஊர்வலம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாரதனை, 1.30க்கு அன்னதானம், இரவு 7.30 மணிக்கு நாதஸ்வர இசை, விநாயகர்பூஜை, வில்லிசை, தீபாராதனை  ஆகியன நடக்கிறது.30ம் தேதி காலை 8 மணிக்கு வில்லிசை, 10.30க்கு தீபாராதனை, பகல் 1.30 மணிக்கு குடமாலை பவனி, மாலை 4 மணிக்கு தீபாராதனை, வில்லிசை ஆகியன நடக்கிறது. 1ம் தேதி காலை  வில்லிசை, தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Tags : Sathavanwai Mutharaman ,festival ,Chaiti ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!